வெள்ளி, 21 நவம்பர், 2008

முரண்பாடுகள்

சின்னக் குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து நாம் நிறைய கற்றுகொள்கிறோம்! அவற்றில் எத்தனை விஷயங்கள் நம்முடைய நித்திய வாழ்க்கையில் கடைபிடிக்கிறோம்?
நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட எத்தனையோ தத்துவங்கள் வாழ்க்கையின் நிதர்சனத்திலிருந்து தலைகீழாய் இருப்பதுதான் உண்மை! பொய் சொல்லாதே என்று சொல்லிக்கொடுக்கப்பட்ட நிலையில் வளர்ந்த பின் ஒவ்வொரு நிலையிலும் பொய் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது! பொய் சொல்லாமல் உண்மை மட்டுமே பேசுபவர்கள் பிழைக்கத்தெரியாதவர்கள் என்று ஏளனப்படுத்தப்படும் அவலம் இன்றும் தொடர்கிறது! பணம் வாழ்வின் சிறிய பகுதி என்றும் அது மட்டுமே வாழ்க்கை ஆகாது என்றும் கற்பிக்கப்படும் பள்ளிகள் இன்னமும் கல்விக்கட்டணம் வசூலித்துக்கொண்டுக்கொண்டுதான் இருக்கின்றன! மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படும் அகநானூறு கூறும் அதே காமமும் காதலும் சமுதாயத்தில் எந்த அளவுக்கு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது கேள்விக்குரியதே. சிறிய வயதில் எதெல்லாம் தவறு என்று பாடங்களிலும் தத்துவங்களிலும் கூறப்பட்டதோ அவை அனைத்துமே நம்முடைய நித்திய வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன. எனவே நண்பர்களே! எந்த ஒரு பாடத்தையும் படித்துவிட்டு அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்! மனசாட்சிக்கும் சட்டத்திற்கும் விரோதமின்றி செய்யும் எதுவும் சரி என்று எடுத்துக்கொள்வதே வாழ்க்கை!