வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

நட்புக்கு நன்றி!

இதுவரை நான் எவ்வளவோ இந்த வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்றாலும் கூட, ஒரு பதிவிற்கு மட்டும் வாசகர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
அது "உனக்காக ஒரு கவிதை".

என் தோழியின் வீட்டிற்கு எதேச்சையாய் சென்றபொழுது அவர் வீட்டு மொட்டை மாடியில் மனசு முழுக்க எங்கள் சிறிய வயது நாட்களையும், எங்கள் மனம் திறந்த பேச்சுக்களையும் அசைபோட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது என்னையும் அறியாமல் தோன்றியது இந்த கவிதை. ரஷிய கவிஞன் ருமாஸ் கம்சதோவ் சொன்னது போல், வார்த்தைகள் தாமாக வந்து பேனா முனையில் வழுக்கி காகிதத்தில் நடனமாடின. மனசு லேசாக இருந்தது. அதனாலோ என்னவோ கவிதை இரண்டு நிமிடத்தில் முடிந்து விட்டது. அதற்கு மேல் எழுத முடிய வில்லை. எங்கள் நட்பு இன்று நாங்கள் உலகின் இரு மூலைகளில் இருந்தாலும், எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல் பேசினாலும் மனசு முழுவதும் மகிழ்ச்சியை நிரப்பி விடுகிறது.

தோழி! நன்றி!

உன் நட்பிற்கும், நட்பால் மலர்ந்த வாடாமலராய் நிற்கும் கவிதைக்கும்!

செவ்வாய், 3 ஜூலை, 2012

காயும் காவிரி!

கரைபுரளும் காற்று,
புரண்டு பறக்கும் மணல்,,
நிற்காமல் ஓடுது லாரிகள் மட்டும்!!

புதன், 27 ஜூன், 2012

வேட்டை நாய்கள்

பணத்தின் பசி!
வேட்டை நாய்களாகும் சிங்கங்கள்!
மனிதம் கொன்று தின்று வளர்ந்த சுயநலம்,

அறிவின் வறட்சி,
பணத்தின் தாகம்,
சூரியன் பார்க்காத கண்கள்,
ரூபாய் நோட்டுக்களை பார்க்கின்றன!
பார்க்காத குழந்தைக்கு
சொத்து தேடி சாகசப்பயணம்!

தூங்க மட்டும் வரும் குகைக்குள்,
சிங்கங்களாய் மாறும்
வேட்டை நாய்கள்!
கட்டாயமயமாக்கப்பட்ட அடிமைத்தனம்
கௌரவமாய் பெயர்மாற்றம்
'விசுவாசம்'!

சுதந்திரமாய் சுற்றுகின்றன நாய்கள்!
பணவேட்டையாடும் வேட்டை நாய்கள் நாம்!

சனி, 9 ஜூன், 2012

இயந்திரம்

பெரிய படிப்பு,
பெரிய வேலை,
பெரிய நிறுவனம்,
பெரிய சம்பளம்,

நிறைய பொறுப்புகள்,
நிறைய பாராட்டுக்கள்,
நிறைய வசவுகள்,
நிறைய பயணங்கள்,

சூரியன் பார்ப்பதில்லை,
மனிதர்களை பார்ப்பதில்லை,

கணினி பார்க்கிறேன்,
கண் விழித்து பார்க்கிறேன்,
பாலை நிலம் போல
வாழ்வு மாறியது உணராமல்.
பாலை நிலத்தில்
பயிர் செய்ய பார்க்கிறேன்.
பிளாஸ்டிக் உரை போட்டு
பாதுகாக்க பார்க்கிறேன்.

பணம் மட்டும் பார்த்துக்கொண்டு
வாழ்க்கை நகர்த்திடும்,
சம்பாத்திய இயந்திரமாய்
சகலமும் மறக்கிறேன்!

ஞாயிறு, 3 ஜூன், 2012

சில மாதிரி படங்களை கடந்து வந்த பொது சிக்கிய ஒரு படமிது!
இது குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!
இந்த படம் குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

புதன், 8 பிப்ரவரி, 2012

இந்திய கிரிக்கெட்

நண்பன் 1: ஏண்டா! ஆஸ்திரேலியா மட்டும் பேட்டிங் பிச்சுல நல்ல அடிக்கிறாங்க, நம்ம ஆளுங்க சொதப்புறாங்க?

 நண்பன் 2: அவுங்க செய்றதையே நம்மளும் செஞ்சா அப்புறம் நமக்கும் அவுங்களுக்கும் வித்தியாசமே இல்லாம போய்டுமே????????????????