புதன், 27 ஜூன், 2012

வேட்டை நாய்கள்

பணத்தின் பசி!
வேட்டை நாய்களாகும் சிங்கங்கள்!
மனிதம் கொன்று தின்று வளர்ந்த சுயநலம்,

அறிவின் வறட்சி,
பணத்தின் தாகம்,
சூரியன் பார்க்காத கண்கள்,
ரூபாய் நோட்டுக்களை பார்க்கின்றன!
பார்க்காத குழந்தைக்கு
சொத்து தேடி சாகசப்பயணம்!

தூங்க மட்டும் வரும் குகைக்குள்,
சிங்கங்களாய் மாறும்
வேட்டை நாய்கள்!
கட்டாயமயமாக்கப்பட்ட அடிமைத்தனம்
கௌரவமாய் பெயர்மாற்றம்
'விசுவாசம்'!

சுதந்திரமாய் சுற்றுகின்றன நாய்கள்!
பணவேட்டையாடும் வேட்டை நாய்கள் நாம்!

சனி, 9 ஜூன், 2012

இயந்திரம்

பெரிய படிப்பு,
பெரிய வேலை,
பெரிய நிறுவனம்,
பெரிய சம்பளம்,

நிறைய பொறுப்புகள்,
நிறைய பாராட்டுக்கள்,
நிறைய வசவுகள்,
நிறைய பயணங்கள்,

சூரியன் பார்ப்பதில்லை,
மனிதர்களை பார்ப்பதில்லை,

கணினி பார்க்கிறேன்,
கண் விழித்து பார்க்கிறேன்,
பாலை நிலம் போல
வாழ்வு மாறியது உணராமல்.
பாலை நிலத்தில்
பயிர் செய்ய பார்க்கிறேன்.
பிளாஸ்டிக் உரை போட்டு
பாதுகாக்க பார்க்கிறேன்.

பணம் மட்டும் பார்த்துக்கொண்டு
வாழ்க்கை நகர்த்திடும்,
சம்பாத்திய இயந்திரமாய்
சகலமும் மறக்கிறேன்!

ஞாயிறு, 3 ஜூன், 2012

சில மாதிரி படங்களை கடந்து வந்த பொது சிக்கிய ஒரு படமிது!
இது குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!
இந்த படம் குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.