வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பெண்கள் நாட்டின் கண்கள்!

கருவிலே கொன்று புதைத்தோம்!
தப்பியதை புணர்ந்து புதைத்தோம்!
வளர்ந்தபின் வன்மையாய் புணர்ந்தோம்!
வீட்டிற்கு விளக்கென்று  சொல்லி எரித்தோம்!

நம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்!
குத்தியது நாமே ஆயினும்,
என்னவோ கண்களுக்குதான்!

பெண்கள் நாட்டின் கண்கள்!

செவ்வாய், 22 ஜூலை, 2014

மொட்டை மாடியில் ஒரு குட்டித்தூக்கம் !

தென்னை மர சாமரம் வீசி
தென்றல் எனும் போர்வை போர்த்தி
கண்ணிமை திறக்காமல்
கட்டிலில் கட்டிப்போட்டாள்
இயற்கைத்தாய்!!!

திங்கள், 21 ஜூலை, 2014

வாழ்வதற்காக!!!

பாடம் படித்தேன்;
பட்டம் பெற்றேன்;
பணம் தேடினேன்;

கனவு தொலைத்தேன்;
கவிதை தொலைத்தேன்;
சுயம் கவிழ்த்து,
சும்மா வாழ்கிறேன்!

புன்னகை மறந்தேன்;
புறையோடிப் போன
புண்களையும் புறக்கணித்தேன்;

காலம் மறந்தேன்;
காதல் துறந்தேன்!
கல்யாணம் செய்து கொண்டு
கடமையோடு குடித்தனம் செய்தேன்.
ஆரோக்கியம் தொலைத்து
அலுவல்களில் ஐக்கியமானேன்!

சம்பாதிக்கிறேன்,
வாழ்வதற்காக(?)!!!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

கண்ணம்மா என் காதலி

எவ்வளவு பறந்தாலும் ,
எங்கே போனாலும் ,
என்ன பேசினாலும் ,
யாரை சந்தித்தாலும் ,
கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று
என் நினைவுகளை உன்னோடு
கட்டி இழுக்கிறது !
என் நொடிகளில் நிறைந்தவளே ,
என்ன மாயம் செய்தாய் ???

செவ்வாய், 3 ஜூன், 2014

மேக ஓவியம்

எத்தனை முறை பார்த்தாலும்
நித்தம் நித்தம் புதுமையாய்,
மேக ஓவியம் தீட்டப்பட்ட வானம்!

வியாழன், 6 மார்ச், 2014

குழந்தை

 அகன்ற தோள்கள் ;
விரிந்த மார்பு ;
முறுக்கிய மீசை ;

அதன் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது ,
துடைக்க மறந்த  ஐஸ் கிரீம் !