வியாழன், 13 நவம்பர், 2025

நகரம்

 அடுக்குமாடி குடியிருப்பு!

வீடுதேடும் சிறுபறவை!

திங்கள், 27 அக்டோபர், 2025

வலி

முளைக்கும்போதே

பெரிதாய் தெரிகிறது,

புதைக்கப்பட்ட வலி!

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

காலை

 ஓங்கி வளர்ந்த மரங்கள்!

காற்றால் கிளை விலக்கி

புவி தேடும் கதிரவன்!

காலை!

சனி, 18 அக்டோபர், 2025

தீபாவளி

 இரவின் இருட்டில் 

பறக்கும் மின்மினி!

தீபாவளி!

புதன், 23 ஜூலை, 2025

மீண்டும் டிஜிட்டல்

 உறங்குதல் போலும் சாக்காடு 

செல்போன் அடித்ததும் விழிப்பது

பிழைப்பு!

புதன், 2 ஜூலை, 2025

டிஜிட்டல்

காதுகள் முழுக்க சத்தம்!

ரயில் முழுக்க அமைதி!

டிஜிட்டல்!

சனி, 7 ஜூன், 2025

ரயில் ஒளி

ஓடாமல் நிற்கிறது ரயில்!
ஜன்னலில் நகர்கிறது மற்றொரு ரயில்!
எதிரொளி!