வெள்ளி, 24 மே, 2024

நான் நானல்ல

உடலோ ஒரு பெரும் கருவி

உயிரோ வெறும் ஆற்றலே 

பெயரோ ஒரு அடையாளம் 

எதுவும் நானல்ல என்றே சிந்தித்தேன்

நானும் நானல்ல என்றே கொண்டால்

நான் யார்?

வெள்ளி, 3 நவம்பர், 2023

மழை

 முகமெல்லாம் பன்னீர்,

முன்னால் வாகனம்,

மழை!



புதன், 8 பிப்ரவரி, 2023

நிதர்சனம்

 எதிர்காலத்திற்கு இடம் அளித்து

இறந்து கொண்டிருக்கும் இறந்தகாலம்;

நிகழ்காலத்தில நிதர்சனம்!

செவ்வாய், 6 டிசம்பர், 2022

வாழ்க்கை

முகம் நிறைய புன்னகை;

முதுகு நிறைய புண்கள்!

வாழ்க்கை!

புதன், 23 நவம்பர், 2022

முத்தம்

இதழ்மேல் முத்தம்;

இசையாய் சிரித்திடும் வெட்கம்;

புல்லாங்குழல்!

செவ்வாய், 15 நவம்பர், 2022

எனைத்தேடும் இரவுகள்

 இரவிலிருந்து இரவு வரை

எனைத்தேடிக்கொண்டிருக்கிறேன்!

கண் மூடித் திறக்கும் முன்

காணாமல் போகிறேன்

நான்!

செவ்வாய், 8 மார்ச், 2022

பெண்மை

 மென்மையல்ல பெண்மை! 

வலிமையின் உருவம்!

உணர்வுகள் பொதிந்து 

உயிர்களை சுமந்து 

பொறுமையாய் கிடந்து 

உலகை வழிப்படுத்தும் 

வலிமையே பெண்மை!


பூக்களைக் கடப்போம்!

புரவிகள் கொடுப்போம்!