முளைக்கும்போதே
பெரிதாய் தெரிகிறது,
புதைக்கப்பட்ட வலி!
ஓங்கி வளர்ந்த மரங்கள்!
காற்றால் கிளை விலக்கி
புவி தேடும் கதிரவன்!
காலை!
இரவின் இருட்டில்
பறக்கும் மின்மினி!
தீபாவளி!
உறங்குதல் போலும் சாக்காடு
செல்போன் அடித்ததும் விழிப்பது
பிழைப்பு!
காதுகள் முழுக்க சத்தம்!
ரயில் முழுக்க அமைதி!
டிஜிட்டல்!
மாலை ரயில்;
கசக்கிப் பிழிந்து எடுக்கும் கூட்டம்!
உருகும் இரு கண்கள்; அதை
பருகும் இரு கண்கள்!