வெள்ளி, 31 டிசம்பர், 2021

சிகரெட்

 மழையில் நனைத்து

பொறியில் பற்றவைத்து

புகைக்கும் சிகரெட் 

ஸைலன்சர்!


புதன், 29 டிசம்பர், 2021

தூக்கம்

 இரவுகளை கடக்கிற போதுதான்

நேரம் வலிப்பதே இல்லை.

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

மாலை மயக்கம்

மஞ்சள் வெய்யில்!

மழைச்சாரல்!

துளிகள் தங்கிய தலைக்கவசம்!

மயக்கம்!

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தேடல்

 குச்சி தேடும் காகம்;

இரை தேடும் கழுகு;

கூட்டுக்குள் குஞ்சுகள்!

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

திங்கட்கிழமை திருப்பள்ளியெழுச்சி

 குளிர்ந்த காலை நேரம்

பச்சைக்கிளிகளின் பள்ளியெழுச்சி

தெளிவு கலந்த தூக்கம் 

கண் விழித்ததும் என் 

கண்ணுக்கினியாள்


இப்படியாக மலர்ந்தது

இன்றைய காலை!

புதன், 18 ஆகஸ்ட், 2021

பல்லி

 தளத்திற்கும் தரைக்குமிடையில் 

நீளம் தாண்டுதல்;

பல்லி!

சனி, 7 ஆகஸ்ட், 2021

காவல்

 நமக்கு வீடு காவல்!

வீட்டுக்கு கதவு காவல்!

கதவுக்கு பூட்டு காவல்!

பூட்டுக்கு சாவி காவல்!


விரலினும் சிறிய சாவி

வீட்டிற்கே காவலென்றால்,

மனிதனின் மனத்திற்கு

காவலென்ன அறிகிலேனே!