இந்த உலகம் மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களை கண்டுள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைக்காத அளவுக்கு அறிவியல் நமது வாழ்கையை மாற்றிப் போட்டிருக்கிறது. கூடவே சில பாதிப்புகளையும் கொடுத்து இருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் பலரும் பேசும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது 'உலக வெப்பமயமாதல்'!!!
நம்மில் பலரும், என் அனைவருமே நித்தமும் கேட்டுக்கொண்டிருக்கும் விஷயமே என்ற போதிலும் நாமும் அதற்கு ஒரு வகையில் காரணம் என்பதை மறக்க முடியாது. நமது உலகத்தை காத்துக்கொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
எக்ஸ்னோரா அமைப்பினர் ஒரு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 10ஆம் தேதி இரவு 10 மணி முதல் பத்து நிமிடங்கள் விளக்குகளை அணைப்பதன் மூலம் பல மடங்கு கார்பன் பயனீட்டு அளவை குறைக்க முடியும் என நம்புகின்றனர். அது உண்மையும் கூட! ஒரு வீட்டில் விளக்கை அனைப்பதல் ஏற்படும் பலன்கள் குறைவே என்றாலும் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியாக செயல்படும் பட்சத்தில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
அவர்களின் அழைப்பு விளக்குகளை அணைப்பதற்காக என்றாலும், முடிந்தால் அனைத்து மின் பொருட்களையுமே பத்து நிமிடங்கள் அணைத்தாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். நமது சமூகம் தூய்மையாகவும் அழகாகவும் இருப்பது நமக்குத்தானே நல்லது?
என் வீட்டில் இருட்டுக்குள் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது. உங்கள் வீட்டில் எப்படி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக