பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி தமிழ் ஈழம் பற்றிய பேச்சுக்களும் மிகக் குறைந்து விட்ட இன்றைய நிலையில், இன்று இணையத்தை துழாவிக்கொண்டு இருந்தபோது திடீரென ஒரு ஜோசியம் கண்ணில் பட்டது. தமிழகத்தின் திரைத்துறை பல்கலை வித்தகர் (?) T . ராஜேந்தர் அவர்களுடைய இணைய தொலைகாட்சித் தளத்தை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு கட்டுரை என்னை கவர்ந்து விட்டது. இறந்து விட்ட அல்லது இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் 2012- இல் தமிழீழத்தின் அதிபர் அவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையின் நிலவரம் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் பெருந்தலைகள் பல சரிந்துவிட்ட நிலையில் இந்த கட்டுரை என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.
இதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்பது ஒரு புறம் கருதப்படுகிறது. காரணம், இறுதியாக நிகழ்ந்த போர், பல மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது. மேலும் தமிழ்கள் சமூக அளவில் சிதறி இருக்கும் நிலையில், மீண்டும் அவர்கள் ஒன்று சேர்வது, சமூக அளவிலும் மக்களின் மனதளவிலும் தேவை. அவற்றை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம் மேலும் காலம் எடுத்துக்கொள்ளும் ஒரு மாபெரும் செயல். இந்த இறுதிப்போர் ஆயுத அளவில் மட்டுமன்றி உளவியல் ரீதியிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்களை பாதித்துள்ளது என்பதை மறக்க முடியாது. மேற்கத்தியப் பாடகரான தமிழர் மியா கூட தன்னுடைய நேர்காணலில் இது குருத்து காலை தெரிவித்தது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு தமிழர்களையும் துளைத்து எடுத்ததற்கு சான்று. மேலும், போரின் வெற்றி, இலங்கை அரசை மனதளவில் பலப்படுத்தி உள்ளது என்றே தோன்றுகிறது.
இருந்தபோதும் கூட, கடந்த காலங்களில் தோல்விக்கு பிறகும் புலிகள் மீண்டு எழுந்திருக்கின்றனர் என்பதையும் மறக்க முடியாது. மேலும் அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக செய்திகள் அல்லது வதந்திகள் வெளிவருகின்றன.
எது எப்படி இருந்தாலும் பிரபாகரனோ அல்லது இலங்கை அரசோ யாராக இருந்தாலும் மக்களின் மகிழ்ச்சிக்கு வழி பிறக்குமானால், நானும் ஒரு தமிழன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைவேன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக