செவ்வாய், 19 அக்டோபர், 2010

இருளில் ஒளிர்ந்த கவிதை

மாலை நேரம்!
மேகமெனும் கருப்பு பைக்கில்
மழைக்காதலன்.
 
மண்மகளை முத்தமிடும் வேகம்!
முதல் தீண்டலிலேயே பூரித்துவிட்ட பெருமூச்சாய்
மண்வாசம்!

மங்கிய விளக்கொளியில்
மழைச் சத்தத்தினூடே
மற்ற சில சத்தங்கள்!
 
மழையை வரவேற்கும்
ஈசல் ரீங்கார எதிரொலி!
 
மழையின் காதலுக்கு
கட்டியம் கூறும் தவளைகள்!
 
தண்ணீர் பிரச்சினை குறைந்த (?)
தருமமிகு சென்னையின் மகிழ்ச்சியொலி!
 
குதூகலமாய் தண்ணீரில்
குதித்து விளையாடும்
குழந்தைகளின் சிரிப்பொலி!
 
பொன்னால் செய்த பொடிமுத்தாய்
பாரதிதாசனை நினைவுபடுத்தும்
குத்துவிளக்கின் குதியாட்டம்!
 
முகம் நிறைய புன்னகையும்,
மனசு நிறைய மகிழ்ச்சியும், மௌனமுமாய்,
 
நானும், தனிமையும்.

2 கருத்துகள்:

AravindBharathi சொன்னது…

இதுல மழையின் மீதுள்ள ரசனையை விட ஒரு தனிமையின் வெளிபாடே ஓங்கி ஒலிப்பதாய் நான் ஊகிக்கிறேன் ஐயனே

சிந்தனைகளின் குழந்தை நான்! சொன்னது…

தனிமையும் மழையும் உணர்வுகளில் ஒன்றிவிட்டது தோழா!