மாலை ரயில்;
கசக்கிப் பிழிந்து எடுக்கும் கூட்டம்!
உருகும் இரு கண்கள்; அதை
பருகும் இரு கண்கள்!
கடற்கரை ஞாயிறு நடை
அவள் நடக்க பாதத்தில் முத்தம்!
அடுத்தவர் முத்தம் தடுக்க
அவசரமாய் காலை
காலை மணலில் புதைத்தது,
அலை!
நான் தண்ணீர்!
என்னை உறைய வைத்தாலும்
குளிர்ச்சியை கொடுப்பேன்!
கொதிப்படைய வைத்தால்
வீழ்படிவதில்லை!
காற்றோடு கலப்பேன்!
கருமேகம் நிறைப்பேன்!
மீண்டும் மண்புகுவேன்!
வேர்வழி உட்புகுந்து
பசுமையாய் மீண்டெழுந்து
பலத்துடன் பாய்வேன்!
நான்,
உடலோ ஒரு பெரும் கருவி
உயிரோ வெறும் ஆற்றலே
பெயரோ ஒரு அடையாளம்
எதுவும் நானல்ல என்றே சிந்தித்தேன்
நானும் நானல்ல என்றே கொண்டால்
நான் யார்?