திங்கள், 23 ஆகஸ்ட், 2021

திங்கட்கிழமை திருப்பள்ளியெழுச்சி

 குளிர்ந்த காலை நேரம்

பச்சைக்கிளிகளின் பள்ளியெழுச்சி

தெளிவு கலந்த தூக்கம் 

கண் விழித்ததும் என் 

கண்ணுக்கினியாள்


இப்படியாக மலர்ந்தது

இன்றைய காலை!

புதன், 18 ஆகஸ்ட், 2021

பல்லி

 தளத்திற்கும் தரைக்குமிடையில் 

நீளம் தாண்டுதல்;

பல்லி!

சனி, 7 ஆகஸ்ட், 2021

காவல்

 நமக்கு வீடு காவல்!

வீட்டுக்கு கதவு காவல்!

கதவுக்கு பூட்டு காவல்!

பூட்டுக்கு சாவி காவல்!


விரலினும் சிறிய சாவி

வீட்டிற்கே காவலென்றால்,

மனிதனின் மனத்திற்கு

காவலென்ன அறிகிலேனே!

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கொசு

இரத்தம் குடிக்கும் ஆசையில்

வலைக்குள் வசிக்கும் கொசுக்கள்,

மனிதர்கள்!