செவ்வாய், 23 டிசம்பர், 2008

சூரியன்

நானும் ஒரு இரவுச்சூரியன்!

என் இரவுகள் அனைத்தும் புதிய விடியலுக்கே

மாலை நேரங்களில் நான் மறைவதனால்,

நான் ஒளிஇழப்பதும் இல்லை!

ஒழிந்து போவதும் இல்லை!

இரவு, இன்னொரு விடியலின் ஆரம்பம்!

நான் ஓரிடத்தில் மறைந்தாலும்,

போகும் இடமெல்லாம் பகல்களே!

இரவுகள் நிரந்தரமாயிருப்பதில்லை!

சூரியன் இரவுகளில் இறப்பதில்லை!கருத்துகள் இல்லை: