சனி, 9 ஜூன், 2012

இயந்திரம்

பெரிய படிப்பு,
பெரிய வேலை,
பெரிய நிறுவனம்,
பெரிய சம்பளம்,

நிறைய பொறுப்புகள்,
நிறைய பாராட்டுக்கள்,
நிறைய வசவுகள்,
நிறைய பயணங்கள்,

சூரியன் பார்ப்பதில்லை,
மனிதர்களை பார்ப்பதில்லை,

கணினி பார்க்கிறேன்,
கண் விழித்து பார்க்கிறேன்,
பாலை நிலம் போல
வாழ்வு மாறியது உணராமல்.
பாலை நிலத்தில்
பயிர் செய்ய பார்க்கிறேன்.
பிளாஸ்டிக் உரை போட்டு
பாதுகாக்க பார்க்கிறேன்.

பணம் மட்டும் பார்த்துக்கொண்டு
வாழ்க்கை நகர்த்திடும்,
சம்பாத்திய இயந்திரமாய்
சகலமும் மறக்கிறேன்!

கருத்துகள் இல்லை: