சனி, 26 ஜூன், 2021

முழுமதி

 முழுமதி!

ஊருக்கே வெளிச்சம் தரும் 

ஒற்றை விளக்கு.

அழகாய் ஒளிர்ந்தது 

அவளது கண்களில்.


ஆம்.

நிலவைப்பார்த்து 

நித்தம் மலரும் 

சந்திரகாந்தி அவள்.


நிலவின் ஒளியில் 

நிறையும் முகத்தில்

மகிழ்ச்சி ததும்பும் 

மழலை அரும்பும். 


குழலில் மறையும்

குழந்தை முகத்தில்

குறையேதும் இல்லாத 

நிம்மதி நிறையும். 


மகிழ்ச்சி பரவும்

மட்டற்று வளரும்.

மனதின் வலிகள்

மறைந்தே போய் விடும்.


காதல் நிறைத்து 

கவிதை எழுதினால்

காகிதம் தீர்ந்தது

கண்கள் பனித்திடும். 



கருத்துகள் இல்லை: