புதன், 5 மார்ச், 2025

காதல்

மாலை ரயில்;

கசக்கிப் பிழிந்து எடுக்கும் கூட்டம்!

உருகும் இரு கண்கள்; அதை 

பருகும் இரு கண்கள்!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

புரட்சி

 ஓங்கி நிற்கிறது 

பத்தடி சுவர்;

கவலையே இல்லாமல் 

அநாயாசமாய் தாவுகிறது

அழகானதோர் பச்சைக் கொடி!

வியாழன், 13 பிப்ரவரி, 2025

பறக்கும் ஓவியம்

மேகம் மறைந்த தெளிந்த வானம்;

நகரும் ஓவியம்,

கழுகு!

செவ்வாய், 21 ஜனவரி, 2025

நம்பிக்கை

பசுமையின் நம்பிக்கையுடன்

கோடைக்குள் நுழைகிறது

காய்ந்த மரம்!

வெள்ளி, 10 ஜனவரி, 2025

முத்தம்

 கடற்கரை ஞாயிறு நடை 

அவள் நடக்க பாதத்தில் முத்தம்!

அடுத்தவர் முத்தம் தடுக்க 

அவசரமாய் காலை

காலை மணலில் புதைத்தது,

அலை!